சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக். கடந்த 2021ல் மும்பையில் உள்ள கப்பல் ஒன்றில் போதை விருந்தில் கலந்து கொண்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதன் பிறகு இந்த விவகாரத்தில் அவர் குற்றமற்றவர் என கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.
ஆரியன்கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாக போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் புதிதாக மதுபான பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் சினிமா மற்றும் டிவி நடிகர் நடிகைகளுக்கு மும்பையில் அவர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது பல நடிகைகளுடன் ஆரியன்கான் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதைப்பார்த்து ஏற்கனவே போதை பொருள் வழக்கில் சிக்கிய ஆரியன்கானுக்கு இதுபோன்ற சரக்கு பிசினஸ் தேவையா? என்கிற கேள்விகளும் சோசியல் மீடியாவில் அவரை நோக்கி எழுந்து கொண்டிருக்கிறது.