'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்து 2019ல் தமிழில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கைதி'. அப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தது.
'கைதி' படக் கதையின் தொடர்ச்சியாக கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்திலும் கதையைத் தொடர்ந்து 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என ஷார்ட் ஆக 'எல்சியு' என பேசப்பட்டது. தற்போது அவர் இயக்கி வரும் 'லியோ' படத்திலும் அந்த 'எல்சியு' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட 'கைதி' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அஜய் தேவகன். ஹிந்திக்காக படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். 'கைதி' படத்தில் இருந்த நரேன் கதாபாத்திரத்தை ஹிந்தியில் பெண் கதாபாத்திரமாக மாற்றி அதில் தபு நடித்துள்ளார். தமிழில் கார்த்திக்கு மனைவி கதாபாத்திரம் கிடையாது. ஹிந்தியில் மனைவி கதாபாத்திரத்தை வைத்து, அதில் அமலா பால் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலருக்கு 47 மில்லியன் பார்வைகள் என பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் 'கைதி' படத்திற்குக் கிடைத்த பெரும் வரவேற்பை விடவும் ஹிந்தி 'போலா'க்குக் கிடைக்குமா என இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.