ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' |
பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். பேட்ட படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்தவர் இவர்தான். இவரும் இவரது மனைவி ஆலியாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்குள் சொத்து குறித்த ஒரு வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. துபாயில் படிக்கும் தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக தன் தரப்பிலிருந்து சப்னா என்கிற இளம் பெண்ணை வேலைக்காக அனுப்பி வைத்த நவாசுதீன் சித்திக், தனக்கு சம்பளம் எதுவும் வழங்காமல் துபாயில் தன்னை அனாதையாக தவிக்க விட்டதாக சமீபத்தில் பணிப்பெண் சப்னா பேசிய ஒரு வீடியோ வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அது மட்டுமல்ல அவரது முன்னாள் மனைவி ஆலியாவை தனக்கு சொந்தமான வீட்டிற்குள் நுழையக்கூடாது என அவர் தடை உத்தரவு போட்டதும், அதனால் அவரது குழந்தைகளுடன் வீட்டு வாசலிலேயே நின்றிருந்த நிகழ்வும் பாலிவுட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் நவாசுதீன் சித்திக்கின் அண்ணன் சம்சுதீன் சித்திக் தொடர்ந்து தனது சகோதரர் பற்றிய குறைகளை அவ்வப்போது பேட்டிகளில் கூறி வந்தார்.
இந்த நிலையில் தனது முன்னாள் மனைவி மற்றும் தனது சகோதரர் தனக்கு எதிரான தகவல்களை பொது வெளியில் பேசி வருவதன் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொள்வதாக கூறி இருவர் மீதும் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார் நவாசுதீன் சித்திக். இந்த வழக்கு வரும் மார்ச் 30ம் தேதி விசாரணைக்கு வருகிறது.