கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை |
ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை இயக்குவார் என்று தான் தகவல் வெளியாகி வந்தன. இந்த ஆண்டு இறுதியில் அந்த படம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ரஜினி, கமலை இணைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் இறங்கி இருப்பதால், கைதி 2 படம் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. அதனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அப்படத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டிருந்த கார்த்தி, அந்த படத்தின் கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்து விட்டாராம். அதனால் மூக்குத்தி அம்மன்-2 படப்பிடிப்பு முடிவடைந்ததும் சுந்தர்.சி, கார்த்தி இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.