2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடிப்பில் 2019ல் தமிழில் வெளியான படம் 'கைதி'. வித்தியாசமான படமாக அமைந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.
தமிழில் படத்தைத் தயாரித்த டிரீம் வாரியர் பிக்சர்ஸ், ஹிந்தியில் டி சீரிஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட், அஜய் தேவகன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. அஜய் தேவகன் இயக்கி, கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அவரே நடிக்கிறார்.
இப்படத்தின் டீசர் நேற்று யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரங்களுக்குள் 9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அஜய் தேவகன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'த்ரிஷ்யம் 2' படம் சிறப்பாக ஓடி வரும் நிலையில் இந்த 'போலா' டீசருக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர்.
'கைதி' படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு ஹிந்தியில் திரைக்கதையை மாற்றி அமைத்துள்ளனர். தமிழில் கதாநாயகி கிடையாது, ஹிந்தியில் தபு கதாநாயகியாக நடிக்கிறார். 'கேஜிஎப் 2' படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் 2023 மார்ச் 30ம் தேதி 3 டியில் வெளியாகிறது.