பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
மாடல் அழகிகளை ஆபாச படம் எடுத்து விற்றதாக எழுந்த புகாரின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டி கணவரான ராஜ் குந்த்ராவை கடந்த ஜூலை 19ம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகைகள் பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ராவுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் ஆபாச படங்களுக்கென தனி மொபைல் ஆப் உருவாக்கி அதில் ஆபாச படங்களை ராஜ் குந்த்ரே பதிவிட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணை ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்த நிலையில், தற்போது மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். 450 பக்கங்கள் கொண்ட இதில், பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஆபாச படங்கள் எடுக்கப்பட்டு அவை ராஜ் குந்த்ராவின் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு மொபைல் ஆப்புகள் மூலம் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ராஜ் குந்த்ரா நிறுவனம் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஷெல்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனபோதிலும் அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருப்பதோடு, வியாபார போட்டி காரணமாக தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள் என்று தனது தரப்பில் அவர் வாதம் செய்து வருவதாகவும் மும்பை போலீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன.