நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் ‛கூலி'. ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான பணிகள் நடக்கின்றன. ஆக., 14ல் படம் வெளியாக உள்ளது.
ஏற்கனவே கூலி படத்திலிருந்து ‛சிக்கிட்டு' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே ஆடியுள்ள ‛மோனிகா' பாடலை இன்று(ஜூலை 11) மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். விஷ்ணு எடவன் எழுதி உள்ள இந்த பாடலை சுபலாஷினி மற்றும் அனிருத் பாடி உள்ளனர். துறைமுகம் பின்னணியில் துள்ளல் பாடலாக வெளியாகி உள்ளது. அதேசமயம் ‛ஜெயிலர்' படத்தில் தமன்னா ஆடிய ‛காவாலா' பாடல் ரேஞ்சுக்கு இது அமையவில்லை.