ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கேங்ஸ்டர் படம் கூலி. ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் ரஜினியுடன் சிறப்பு வேடத்தில் அமீர் கான், முக்கிய வேடங்களில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரஜினியுடன் பணியாற்றிய அனுபவத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.
அவர் கூறுகையில், ‛‛என் தந்தையும், ரஜினியும் தமிழ் சினிமாவில் இரண்டு சின்னமான தூண்கள். மற்ற அனைவரையும் போலவே நான் அவரை எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் கூலி படப்பிடிப்பின் போது அவரை அறிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அவர் பல்வேறு குணாதிசயங்களின் தனித்துவமான கலவை. அவர் ஒரு புத்திசாலி, கத்தியை போல கூர்மையானவர். ஆனால் அன்பானவர் மிகவும் கூலானவர். படப்பிடிப்பு தளத்திற்கு அவ்வளவு நேர்மறையான ஆற்றலை கொண்டு வருகிறார். எல்லோரும் அவரைச் சுற்றி வேலை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்'' என்கிறார் ஸ்ருதிஹாசன்.