தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! | கமர்ஷியல் படங்களில் உச்சம் தொடுவேன் - திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் | மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் |
2023ம் ஆண்டின் முக்கியமான படங்களாக எதிர்பார்க்கப்படும் 'பத்து தல' படம் நாளையும், 'விடுதலை' படம் நாளை மறுநாளும் வெளியாக உள்ளன. இந்தப் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து படப்பிரதி ரெடியானதுமே படக்குழுவினர் அவர்களது படங்களை சிறப்புக் காட்சிகளாகப் பார்த்து ரசித்துள்ளனர்.
'விடுதலை' படத்தின் சிறப்புக் காட்சியை இயக்குனர் வெற்றிமாறன், இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பார்த்துள்ளனர். 'பத்து தல' படத்தின் சிறப்புக் காட்சி சில தினங்களுக்கு முன்பு சிம்புக்காக நடந்தது. அடுத்து சிம்புவின் அப்பா டி ராஜேந்தர், அம்மா உஷா ராஜேந்தர் ஆகியோருக்காக நடந்தது.
இரண்டு படங்களுமே சிறப்பாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களுக்குமான முன்பதிவு ஆரம்பமாகி நடந்து வருகிறது. படம் வெளிவந்த பிறகுதான் இப்படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தெரிய வரும்.