லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இயக்குனர் வெற்றிமாறன் இப்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸாக உள்ளது. அதன்பின் சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் வட சென்னை 2 ஆகிய படங்கள் லைனில் உள்ளன.
இந்நிலையில் வெற்றிமாறன் தன் உதவி இயக்குனர்கள் 25 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளாராம். இந்த இடத்தில் வீடு கட்டிக் கொள்ளவோ, அல்லது சிறு அளவில் விவசாயமோ செய்ய சொல்லி உள்ளாராம். அதேசமயம் எக்காரணத்தை கொண்டும் அந்த இடத்தை விற்க கூடாது என கண்டிப்பான முறையில் கூறி உள்ளார் வெற்றிமாறன்.
இது குறித்து செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் வெற்றிமாறனை பாராட்டி வருகின்றனர்.