''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மிஸ்டர் லோக்கல்'. இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் இதுவரை 11 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 கோடி ரூபாய் இதுவரை கொடுக்கப்படவில்லை.
இதைதொடர்ந்து தனது சம்பள பாக்கி 4 கோடியை தனக்கு தரக்கோரி சிவகார்த்திகேயன் தரப்பில் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பும் சமரசம் செய்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.