காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த மார்ச், 24ல் வெள்ளியன்று சென்னையில் காலமானார். வயது மூப்பு மற்றும் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வெள்ளியன்று தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், கமல், விஜயகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். விஜய், பார்த்திபன், ஏஎல் விஜய், முருகதாஸ், மகிழ்திருமேனி, சிம்பு, மிர்ச்சி சிவா, அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அஜித்தின் வீட்டிற்கு இன்று(மார்ச் 27) நேரில் சென்று அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர். அஜித் வீட்டிற்கு சூர்யா, கார்த்தி காரில் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலானது.