மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்து தல. கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்றது. அதையடுத்து இப் படத்தின் டிரைலரும் வெளியானது. தற்போது பத்து தலை படத்தின் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிம்பு பேசும்போது, கவுதம் கார்த்திக்கிடம் எனக்கு பிடித்த பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆக்ஷன். இவர்கள் எல்லாம் எதற்காக ஆக்ஷன் பண்ணுகிறார்கள் என்று தோன்றலாம். ஆனால் ஒரு ஹீரோ பண்ணக்கூடிய ஆக்சன் எல்லோரையும் என்டர்டைன்மென்ட் பண்ணுவது ரொம்ப கடினமான விஷயம் . அது போன்ற கடினமான விஷயத்தை கவுதம் கார்த்திக் ரொம்ப சாதாரணமாக செய்கிறார். இந்த படத்தில் நடித்த போது அவருடைய அந்த ஆக்ஷனை நான் ரொம்பவே ரசித்தேன். அது எனக்குள் ஒரு வியப்பை ஏற்படுத்தியது என்று கவுதம் கார்த்திக்கின் நடிப்பை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் நடிகர் சிம்பு.