Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது பட தம்பதி

22 மார், 2023 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Bomman---Belly-workship-at-Gutuvayur-temple

சமீபத்தில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் முதுமலை யானைகள் முகாமில் யானைகளை பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினரின் வாழ்க்கையை சொல்லும் விதமாக உருவாகியிருந்த தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்டரி படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த டாக்குமென்ட்ரியை கார்த்திகி கொன்சால்வெஸ் என்பவர் இயக்கியுள்ளார். நேற்று சென்னை திரும்பிய அவரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்த தமிழக முதல்வர், அவருக்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் காசோலையை பரிசாக வழங்கினார்.

இன்னொரு பக்கம் இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடித்த பொம்மன் பெல்லி இருவரையும் பாராட்டி கவுரவிப்பதற்காக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் இவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். அதேசமயம் இவர்கள் இருவரும் தற்போது தங்களது வேண்டுதலையும் காணிக்கையும் நிறைவேற்றுவதற்காக குருவாயூர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கும் தரிசனம் செய்ய இருக்கின்றனர். தங்களது பேரன் சஞ்சய் குமாரையும் இந்த பயணத்தில் தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். குருவாயூர் கோவிலில் உள்ள ரவி கிருஷ்ணன் மற்றும் கோபி கிருஷ்ணன் ஆகிய யானைகளை பார்த்து மகிழ்ந்த இந்த தம்பதியை, கேரள மாநில யானைகள் நல விரும்பிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் குருவாயூர் கோவில் தேவசம் போர்டு நிர்வாகி இருவரும் வரவேற்று கவுரவித்தனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கருப்பு வெள்ளை புகைப்படங்களுக்கே 20 லட்சம் லைக்ஸ் வாங்கிய சமந்தாகருப்பு வெள்ளை புகைப்படங்களுக்கே 20 ... மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம் மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Nava - Thanjavur,இந்தியா
22 மார், 2023 - 13:37 Report Abuse
Nava படத்தில் நடித்த சாமானியனனா பழங்குடியின தம்பதிக்கு இரண்டு இலட்சம் தான் பரிசு ஆனால் படத்தை இயக்கிய goansalves க்கு ஒரு கோடி பரிசு இது தான் திராவிட மாடலா?
Rate this:
SANKAR - ,
22 மார், 2023 - 16:10Report Abuse
SANKARyes..they should have been given more..feel producer and director will do.basically Oscar won by producer and director ...do not know what these couple got for acting.they are simple people and a ten lakh will support them for a long long time.box office collection of this movie is poor as it is basically a documentary without commercial release in theatres....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in