ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைக்க அஜித் நடிக்கும் 62வது படம் தயாராகும் என கடந்த வருடம் மார்ச் 18ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைக்கா நிறுவனம். அந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்தைக் கடந்துவிட்டது.
அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதில்லை என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், லைக்கா நிறுவனம் அதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 'எகே 62' படத்தை இயக்கப்போவது மகிழ் திருமேனி என செய்திகள் வெளிவந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. இருப்பினும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கூட இன்னும் வெளியிடாமல் உள்ளார்கள்.
அஜித் போன்ற முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கப் போகும் ஒரு படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் போன பின்பும் அது பற்றிய தெளிவான ஒரு அறிவிப்பு வெளிவராமல் இருப்பது ஆச்சரியம்தான். விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது. விஜய்யின் அடுத்த படமான 'லியோ' படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டது. அதே சமயம் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பிலேயே இவ்வளவு குழப்பம் நீடித்து வருவது அஜித் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.