கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
ராட்சசி படத்தை இயக்கிய கவுதமராஜ் இயக்கும் படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இதில் அருள்நிதி நாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, ராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் கூறுகையில், ''படத்தின் கதை, உண்மை சம்பவமா என கேட்கின்றனர். உண்மையாக நடக்கிற கதையே இப்படம். தற்போது நடக்கும் சம்பவத்தையும், ராமநாதபுரத்தில் உள்ள கழுமரங்களையும் இணைத்து பின்னப்பட்ட கதை இது. ஆக்சன் கலந்த கமர்ஷியல் படம். இமான் இசையமைத்துள்ளார்,'' என்றார்.