சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
2012ம் ஆண்டு வெளிவந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு சில பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் “மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன்” ஆகிய படங்கள் மட்டும்தான் குறிப்பிடத்தக்க விமர்சனங்களைப் பெற்ற படங்களாக அமைந்தது. மற்ற படங்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பைக் கூடப் பெறவில்லை.
உதயநிதி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான பின் வெளிவரும் படமாக நாளை(மார்ச் 17) வெளியாக உள்ள 'கண்ணை நம்பாதே' படம் இடம் பெற உள்ளது. இப்படத்தைக் கடந்த நான்கு ஆண்டுகளாக தயாரித்து வந்தனர். இப்படம் ஆரம்பமாகும் போது திமுக இளைஞரணி செயலாளராக மட்டுமே இருந்த உதயநிதி அதன்பின் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகி, இப்படம் வெளியாகும் போது அமைச்சராகவும் ஆகிவிட்டார்.
ஒரு கிரைம் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் உதயநிதியுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்காக கடந்த ஒரு வாரமாக பல பேட்டிகளிலும் பங்கேற்றார். இந்தப் படத்தை அடுத்து உதயநிதி நடித்துள்ள கடைசி படமான 'மாமன்னன்' படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.