பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

திரையுலகில் வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருதை வென்ற இரண்டு இந்திய படைப்புகளை பார்லிமென்ட்டில் அடுத்த வாரம் திரையிடப்படவுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது : இரண்டு படங்களின் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரை கவுரவிக்கும் திட்டமும் உள்ளது. ஆர்ஆர்ஆர் படமும், தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படமும் எம்.பி.க்களுக்கு அடுத்த வாரம் பார்லிமென்ட்டில் பால் யோகி அரங்கத்தில் திரையிடப்படவுள்ளது. இதற்கான முயற்சிகளை அமைச்சர் அனுராக் தாக்குர் மேற்கொண்டு வருகிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.




