கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
'மண்டேலா' படத்தின் மூலம் அறிமுகம் ஆகி தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பை படம் எட்டியுள்ளது.
இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை தனியார் டிவி கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த உரிமை ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனமும், ஆடியோ உரிமையை சரிகம நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. தற்போது வரை இந்த படம் ரிலீசுக்கு முன்னரே ரூ.83 கோடி வரை பிஸ்னஸ் செய்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.