திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை |
2023 - 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வருகிற மார்ச் 26ம் தேதி நடக்க இருக்கிறது. இதனை இரண்டு முன்னாள் நீதிபதிகள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து நடத்த இருக்கிறார்கள். இதில் தற்போது பொறுப்பில் இருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியினர் போட்டியிடுகிறார்கள். தற்போது இந்த அணியில் இருந்து விலகிய சிலர் தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் 'உரிமை காக்கும் அணி' என்ற பெயரில் புதிய அணி ஒன்றை தொடங்கி உள்ளனர்.
இதில் மன்னனுடன், கமீலா நாசர், பி.எல்.தேனப்பன், கே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். 300 தயாரிப்பாளர்களுக்கு மேல் இந்த அணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அணியின் ஆலோசனை கூட்டம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. விரைவில் யார் யார் எந்தெந்த பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்பதை அறிவிக்க இருக்கிறார்கள்.