டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் 'தி லிட்டில் மெர்மெய்ட்' என்ற ஹாலிவுட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்தப்படம் வருகிற மே 26ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
படத்தின் கதை : இடுப்புக்கு மேல் மனித உருவமும், இடுப்புக்கு கீழ் மீன் உருவமும் கொண்டவர்கள் வாழும் கடல் பிரதேசத்தை சேர்ந்தவர் ஏரியல் என்ற கடல்கன்னி. இவர் கப்பல் விபத்தில் கடலில் முழ்கும் இளைஞனை காப்பாற்றி கரை சேர்க்கிறாள். அவனை காதலிக்கவும் செய்கிறார்கள். இதற்கு அவள் கரையில் வாழ வேண்டும். கடலின் அரசனாக இருக்கும் ஏரியலில் தந்தையை ஒழிக்க நினைக்கும் சூனிய கிழவி ஒருத்தி அடுத்த வாரிசாக இருக்கும் ஏரியலை கரைக்கு அனுப்பிவிட்டால் அடுத்த ராணியாக தானே முடிசூட்டிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஏரியலுக்கு முழு மனித உருவம் கொடுத்து அனுப்பி விடுகிறார். காதலடன் வாழும்போதுதான் இந்த சதி திட்டம் அவளுக்கு தெரிகிறது. பின்னர் ஏரியல் என்ன செய்கிறாள் என்பதுதான் படத்தின் கதை.
பாடகியும் நடிகையுமான ஹாலே பெய்லி படத்தில் ஏரியலாக நடிக்கிறார். ஜோனா ஹவுர்-கிங் இளவரசர் எரிக்காகவும், நடித்துள்ளனர்.




