''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'அயோத்தி'. அந்தப் படத்தின் கதையை பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆனால், படத்தின் கதை தன்னுடைய பதிவு என எழுத்தாளர் மாதவராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இவர் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், “தீராத பக்கங்கள் வலைப்பக்கத்தில் 2011 செப்டம்பர் 3ம் தேதி நான் எழுதிய 'அழக்கூட திராணியற்றவர்கள்' என்னும் பதிவின் அப்பட்டமான காப்பியாகத் தெரிகிறது. அதன் லிங்க்கை முதல் கமெண்ட்டில் தருகிறேன். படம் பார்த்தவர்கள் சொல்லுங்கள்.
எங்கள் சங்கத் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் பெற்ற நேரடி அனுபவத்தை நான் பதிவு செய்திருந்தேன். ராமேஸ்வரம் வந்த வட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் சிக்கி தவித்துப் போய் நின்றபோது எங்கள் தோழர்கள் செய்த மனிதாபிமான உதவி அது. 2021ல் வெளி வந்த எனது 'இரண்டாம் இதயம்' புத்தகத்திலும் இந்த பதிவு இடம் பெற்றிருந்தது.
அயோத்தி திரைப்படம் யாருடைய 'கதை'யும் அல்ல. உண்மை நிகழ்வு. அதில் நேரடியாக பங்கு பெற்ற இரண்டு தோழர்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உயிரோட்டமாய் முதன் முதலில் எழுத்தாக செப்டம்பர் 2011ல் ஆவணப்படுத்தியதும் ஒரு கதை போல எழுதியதும் நான். சம்பந்தப்பட்ட அந்த தோழர்களே என் பதிவைப் படித்து விட்டு கண் கலங்கினர்.
நான் எழுதியதன் மூலம் அந்த தோழர்களை எங்கள் சங்கமே கொண்டாடியது. தீராத பக்கங்களில் படித்து விட்டு பலரும் பாராட்டினர். எல்லாவற்றையும் அப்படியே மறைத்து விட்டு அல்லது புதைத்து விட்டு என் கதை என்றும், என் அறிவுச் சொத்து எனவும் உண்மையை புரட்டுவது யோக்கியமும், அறமும் ஆகாது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், அயோத்தியா பட தயாரிப்பாளர், இயக்குனருக்கும் என் கண்டனங்கள்,” என பதிவிட்டுள்ளார் மாதவராஜ்.
அடுத்து பத்திரிகையாளர் நரன் என்பவரும் 'அயோத்தி' கதை தன்னுடையது என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அது குறித்து, “கடந்த 8 நாட்களாக என் மகள் சூசன் உடல்நலக் குறைவின் காரணமாக Chennai SIMS ல் அனுமதித்த காரணத்தால் ( அதன் பின் தொடர்ச்சியான பயணமும்...) இதில் பெரிதாகக் கவனம் ஏதும் செலுத்தவில்லை.
நிறைய நண்பர்கள் அந்த Trailer ஐப் பார்த்துவிட்டு 'வாரணாசி' கதையைப் போலவே இருப்பதாகச் சொன்னார்கள். பார்த்துவிட்டு எனக்கும் அப்படித்தான் தோன்றியது. தயாரிப்பாளரிடம் போன் செய்து கேட்ட போது அவர் இயக்குநரின் எண் அனுப்பிப் பேசச் சொன்னார். நானும் அவரிடம் என் தரப்பு சந்தேகத்தைச் சொல்லிப் படத்தைப் பார்க்க அனுமதிக்க முடியுமா ? என்று கேட்டதற்கு அவர் படத்தைக் காட்ட முடியாதென மறுத்து விட்டார். வேண்டுமானால் கேஸ் போட்டுக் கொள்ளுங்கள் என்றும் சொல்லி விட்டார்.
அதன் பிறகு தான் கதை எழுத்தாளர் எஸ். ராவினுடையது என்று சொன்னார்கள். நான் அவருக்கும் பேசினேன். அவர் இது தனது கதை என்றும், பலவருடங்களுக்கு முன்பே அதை எழுதியதாகவும் சொன்னார்.
'அந்தக் கதை வாசிக்கக் கிடைக்குமா ?' என்று கேட்டதற்கு, 'சினிமாவிற்கான கதையை நான் எப்போதும் எழுதுவதில்லை. அதைச் சொல்ல மட்டுமே செய்வேன்' என்று சொன்னார். (தயாரிப்பாளர் தன்னிடம் எழுத்தாளர் 2 பக்கக் கதை கொடுத்ததாகவும் அதற்கு 8 லட்சம் பணம் கொடுத்ததாகவும் சொல்லி விட்டார். எழுத்தாளர் . மாதவராஜ் அந்த 2 பக்கத்தை வாங்கிப் பார்த்தால் தெரியும்).
நான் அதன் பின் என் மகளின் ஆஸ்பத்திரி காரியங்களைப் பார்க்கப் போய்விட்டேன். எனது 'வாரணாசி' கதையை வாங்கியிருக்கும் முக்கியமான இயக்குநரும் இந்தப் பிரச்சனையை அதன் போக்கில் விட்டு விடச் சொல்லி விட்டார். அதன் பின் நிறைய பத்திரிகை நண்பர்கள் இது பற்றிக் கேட்ட போதும் நான் இந்தப் படம் குறித்து விவாதிக்க மறுத்து விட்டேன். இப்போது படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தாகி விட்டது .
எனது கதையின் சில காட்சிகளும் கதை மாந்தருக்கான Character Designs ம் அதில் அப்படியே இருக்கிறது. இரண்டு கதைக்கும் நிறைய பொதுத் தன்மைகள் இருக்கின்றன என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் எழுத்தாளர் மாதவராஜின் கதை 75 சதவிகிதம் அப்படியே இருக்கிறது.
என்னை விடுங்கள். எழுத்தாளர் மாதவராஜ்க்கு, எஸ்.ரா செய்தது மிகப் பெரிய துரோகம். சக எழுத்தாளரின் படைப்பை எந்த மனக் குறுகுறுப்பும் இல்லாமல் திருடி எடுத்துக் கையாண்டிருக்கிறார். பெரிய எழுத்தாளர் என்ற போர்வையில் யாரும் அவரை ( எஸ் .ரா )ஒன்றும் சொல்ல மாட்டார்கள் . அவரிடம் எனக்கு இந்த அனுபவம் ஒன்றும் புதிதல்ல. இந்தக் கதையில் எழுத்தாளர் மாதவராஜுக்கும் Mathavaraj திரைக்கதையில் பணியாற்றிய நண்பருக்கும் (Sankar das) உரிய உரிமையும் இழப்பீடும் வழங்க வேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார்.
கொஞ்ச நாட்களாக தமிழ் சினிமாவில் இந்த கதைத் திருட்டு விவகாரம் அடங்கியிருந்தது. இப்போது 'அயோத்தி' படத்தின் மூலம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இது குறித்து 'அயோத்தி' படக்குழுவினர் என்ன சொல்லப் போகிறார்கள்.