லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பிரியா ஆனந்த், அபிராமி வெங்கடாசலம் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்தநிலையில் பெண் ஒருவர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களின் புருவங்களை உயர்த்தியது. சிலர் அவரது தோற்றத்தை பார்த்துவிட்டு, விக்ரம் படத்தில் நடித்த பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் என்று கூட தவறுதலாக நினைத்துக்கொண்டு இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு.,வுடன் இணைத்து பேசி வருகின்றனர்.
ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் மாடல் அழகியும் மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவருமான நந்தினி நாகராஜ் என்பவர் தான்.. அது மட்டுமல்ல இவர் தொழிலதிபராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருப்பதுடன் ‛வால் ஆப் ஃபேம்' என்கிற விருது வழங்கும் விழாவையும் நடத்தி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் சுயவிவர குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இவருடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தில் லோகேஷ் கனகராஜ், தான் அணிந்துள்ள அதே உடையுடன் அதே இடத்தில் நடிகர் விஜய்யுடனும் இணைந்து எடுத்துக்கொண்ட இன்னொரு புகைப்படமும் வெளியாகி உள்ளதால் இந்த படத்தில் நந்தினி நாகராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.