என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
இயக்குனர் த்ரிவிக்ரமின் படங்களில் தொடர்ச்சியான கதாநாயகியாக பூஜா ஹெக்டேநடித்து வருகிறார். இவரின் ஆஸ்தான நாயகி எனரே பூஜாவை சொல்லலாம். மேலும் திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்திலும் பூஜா ஹெக்டே தான் நடிப்பார் என்ற செய்திகளும் வந்துகொண்டு இருக்கிறது.
தற்போது நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் இயக்குனர் திரிவிக்ரம் இயக்கிவரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டேவை சந்தோஷப்படுத்த திரிவிக்ரம் புதிய கார் ஒன்றை படப்பிடிப்பு தளத்திற்கு வர வழைத்துள்ளார். பொதுவாக நடிகைகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வர கார் ஏற்பாடு செய்யப்படும். தற்போது இந்த பட படப்பிடிப்பு வர இவருக்கு இந்த புதிய காரை ஏற்பாடு செய்துள்ளாராம் திரிவிக்ரம். இந்த செய்தி இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது.