லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைகிறார். 2017ம் ஆண்டு இந்த படப்பிடிப்பு துவங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.
சில மாதங்களாக இந்த படம் மீண்டும் துவங்கப்பட்டு மீதமுள்ள காட்சிகள் படம் பிடிக்கப்படும் எனவும் விரைவில் திரைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. விக்ரமும் மீதி காட்சிகளில் நடித்து கொடுத்துள்ளார். இதனையடுத்து இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இன்று(பிப்., 25) படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விரைவில் படம் திரைக்கு வரும் எனவும் திரையரங்குகளில் சந்திக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இசைப்பணிகள் முடிந்ததும் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.