100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமா வசூலைக் குவித்தது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்குக் குறிப்பிடும்படியான வசூல் கிடைத்தது.
ஆஸ்கர் விருதுக்காக சிறந்த பாடல் பிரிவில் இப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வாகியுள்ளது. அதற்கு விருது கிடைக்குமா என்பது இன்னும் இரண்டு வாரத்தில் தெரிந்துவிடும்.
இதனிடையே, அமெரிக்காவில் உள்ள “ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அவார்ட்ஸ்” வழங்கும் திரைப்பட விருதுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த ஸ்டன்ட்ஸ், சிறந்த ஒரிஜனல் பாடல் ஆகிய நான்கு விருதுகளை அள்ளியுள்ளது. அந்த விருதுகளை ராம்சரண், ராஜமவுலி, கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார். அடுத்த சில நாட்களில் ‛ஆர்ஆர்ஆர்' குழுவினர் மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.