'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் |

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், சம்யுக்தா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாத்தி'. தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியானது.
படம் வெளியான மூன்றே நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. தெலுங்கில் படத்தின் வெற்றியை சக்சஸ் மீட் வைத்து கொண்டாடியது படக்குழு. தனுஷ் தவிர மற்ற கலைஞர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இன்று சென்னையில் 'வாத்தி' படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இயக்குனர் வெங்கி அட்லூரி, நடிகர் ஷரா உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் உள்ளிட்ட யாரும் கலந்து கொள்ளவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெங்கி அட்லூரி, படம் வெளியான 8 நாட்களில் 75 கோடி வசூலித்து, மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் தயாரிப்பு நிறுவனமும் அதை சமூக வலைத்தளப் பதிவு மூலம் உறுதி செய்தது.
இப்படத்தின் மூலம் தெலுங்கில் தனது நேரடி அறிமுகத்தை தனுஷும், தமிழில் தனது நேரடி அறிமுகத்தை இயக்குனர் வெங்கியும் பதிவு செய்துள்ளனர்.