‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் |

சுந்தர பாண்டியன், கும்கி, குட்டிப்புலி, மஞ்சப்பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன் உள்பட பல படங்களில் நடித்தார் லட்சுமி மேனன். பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, திடீரென நான் படிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றதால் பட வாய்ப்புகள் குறைந்தன.
'றெக்க' படத்திற்கு பிறகு 5 ஆண்டுகள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த லட்சுமி மேனன் கடைசியாக 'புலிக்குத்தி பாண்டி' என்ற படத்தில் நடித்தார் இந்த படம் தொலைக்காட்சியில் வெளியானது தற்போது அவர் யோகி பாபுவுடன் 'மலை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லட்சுமி மேனன் 'சப்தம்' என்ற ஹாரர் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஈரம், வல்லினம் ஆறாது சினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் தயாரித்து, இயக்குகிறார். ஆதி நாயகனாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.