ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் என்பது இல்லையே படத்தின் படப்பிடிப்பு முடிவுபெற்றதை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் கதாநாயகியான நடிகை எமி ஜாக்சன் நடித்துள்ளார். நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மீண்டும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதில் க்ளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதோடு இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதையொட்டி அருண் விஜய், எமி ஜாக்சன் மற்றும் படக்குழுவினர்கள் உள்ளிட்டோர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்கள்.




