நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ராம்சரண் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான சமயத்தில் கடந்த 2009ல் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவான மகதீரா என்கிற திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் தென்னிந்திய அளவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான அந்த படம் அவரது ரசிகர் வட்டத்தையும் அதிகப்படுத்தியது. குறிப்பாக இந்த படத்தில் ஒற்றை ஆளாக எதிரிகள் 100 பேரை சவால் விட்டு ராம்சரண் கொல்கின்ற காட்சி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து தான் அவருக்கு கமர்சியல், மாஸ் படங்கள் நிறைய தேடி வந்தன.
அந்த படம் வெளியாகி 14 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது ராம்சரணின் புகழ் அந்த சமயத்தில் இருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 27ஆம் தேதி ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படம் ரசிகர்களின் கோரிக்கையின் பேரில் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.