நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை ராஷ்மிகா மந்தனா மிகக்குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்து தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்து இரண்டு படங்களில் நடித்து ரிலீஸ் செய்தும் விட்டார். அதனால் பல சர்வதேச விழாக்களில் கலந்துகொள்ள அவருக்கு தொடர் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ராஷ்மிகா.
அப்போது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட தென் கொரிய நடிகர் ஜங் வூ மற்றும் தாய்லாந்து நடிகர் கனாவட் ட்ராய்பிபட்டனோபோங் ஆகிய இருவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ராஷ்மிகா. இந்த புகைப்படத்தில் உள்ள ராஷ்மிகாவின் தோற்றத்தை பார்க்கும்போது அவரே ஒரு வெளிநாட்டு நடிகை போல தான் காட்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.