சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
நடிகர் சிம்பு தற்போது கேங்ஸ்டராக நடித்து முடித்துள்ள படம் பத்து தல. இந்த படம் வருகிற மார்ச் மாதம் திரைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே சிம்புவின் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாவதும், அதையடுத்து அவரது பெற்றோர் மறுப்பு தெரிவிப்பதுமாக இருந்து வருகிறது. தற்போது சிம்புவுக்கு 40 வயது ஆகிவிட்டதால் அவரது பெற்றோர் விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருப்பதாக மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
சிம்புவின் ஜாதகத்துக்கு பொருத்தக்கூடிய பெண்ணை அவர்கள் தேடி வந்த நிலையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகளை சிம்புவுக்கு அவரது தந்தையான டி. ராஜேந்தர் பேசி முடித்து வைத்திருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு சிம்புவின் திருமணம் குறித்து வெளியான செய்திகள் வதந்தியாகி விட்டபோதும் இந்த முறை கண்டிப்பாக சிம்பு திருமணம் நடைபெற்று விடும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.