'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி |

தனுஷ் நடித்த நானே வருவேன் என்ற படத்தை இயக்கினார் செல்வராகவன். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதையடுத்து சாணிக்காயுதம், பீஸ்ட், பகாசூரன் ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்த செல்வராகவன், அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் பா. பாண்டி படத்தை அடுத்து தனது 50வது படத்தை இயக்க உள்ளார் தனுஷ்.
இதுபற்றி செல்வராகவன் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛தனுஷ் இயக்கும் புதிய படத்தின் முழு கதையும் எனக்கு தெரியும். அது ஒரு சிறந்த கதை. கண்டிப்பாக இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும். அதோடு, இந்த படத்தில் நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்படி அவர் வாய்ப்பு கொடுத்தால் அதை சிறப்பாக செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார் செல்வராகவன்.