அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
பெங்களூருவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரஜினி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஜினி, இந்த நாள் என்னை உருவாக்கிய இந்த தங்க இதயத்தில் தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன் . இறைவனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அண்ணனுக்கு தங்கமழை
தன் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு தங்க நாணயங்களால் அபிஷேகம் செய்த படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து ரஜினி கூறியுள்ளதாவது: என் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒரே நாளில் எனது குடும்பத்தினருடன் கொண்டாடியது மகிழ்ச்சி. என்னை இன்று இந்தளவு ஆளாக்கிய, இந்த தங்க இதயத்தில் தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன். நன்றி இறைவனே.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.