''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சென்னை: நடிகர் மயில்சாமி மறைவு இந்த சமூகத்திற்கு பெரும் இழப்பு, அவரின் ஆசையை நான் நிறைவேற்றுவேன் என அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபின் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட அவரது உயிர் பிரிந்தது. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். பலர் நேரில் சென்று அஞ்சலியும் தெரிவித்தனர்.
இன்று(பிப்., 20) காலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; ‛‛மயில்சாமியை எனக்கு இளம் வயதிலேயே தெரியும், அவர் எனது நீண்டகால நண்பரும்கூட . அவர் எம்ஜிஆர் ரசிகர், சிவபக்தர். என்னை சந்திக்கும் போது அவர் அடிக்கடி இருவரை பற்றிதான்பேசுவார். அவருடன் அதிக படங்களை நடிக்க முடியவில்லை. வாய்ப்பு இல்லாமல் போனது. அவர் அடிக்கடி திருவண்ணாமலைக்கு செல்வார். அங்கிருந்தபடியே என்னிடம் போனில் பேசுவார்.
சில நாட்களுக்கு முன்பு 3 முறை தொடர்பு கொண்டார். ஆனால் என்னால் போனை அட்டண்ட் பண்ண முடியவில்லை. பேச முடியலன்னு சாரி கேட்கணும்னு இருந்தேன். மறந்துட்டேன், திரைப்பட உலகில் விவேக், மயில்சாமி ஆகிய இருவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கு இழப்பு. இருவரும் சிந்தனைவாதிகள், சமூக அக்கறைவாதிகள். நான் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய அவர் ஆசைப்பட்டதாக கூறினார். நிச்சயம் ஆசையை நிறைவேற்றுவேன்.
மயில்சாமியின் இறப்பு தற்செயலாக நடக்கவில்லை. ‛இது அவனுடைய கணக்கு'. சிவன் அவருடைய சிறந்த பக்தரை கூட்டிட்டு போயிட்டார். இவரது வாரிசுகள் எதிர்காலத்தில் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு ரஜினி கூறினார்.