நடிகர் ஜெய்சங்கர் பெயரிலான சாலை திறப்பு | பாரம்பரியமிக்க ஏவிஎம் தியேட்டர் இடிப்பு | சினிமா கைவிட்டால் படிப்பை வைத்து பிழைத்துக் கொள்வேன்: சிவகார்த்திகேயன் | சினிமா நடிகைகளுக்கு சவாலாக களமிறங்கும் ஏஐ அழகிகள் : ஏஐ.,யில் உருவான இசை ஆல்பம் வைரல் | ஏஐ தொழில்நுட்பத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சன்னி லியோன் | எனது அந்த இரண்டு படங்களை ஜனாதிபதி குறிப்பிட்டது ஏன் : மோகன்லால் விளக்கம் | 60 புதுமுக நடிகர்களுடன் பிரித்விராஜ் நடிக்கும் சந்தோஷ் டிராபி | கூலியில் ஏற்பட்ட மனக்குறை : ரெபோ மோனிகா ஜான் ஆதங்கம் | 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரிஜினல் கிளைமாக்ஸ் உடன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஷோலே | 'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! |
தமிழில் நிறைய முண்ணனி நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர் தாணு. சமீபத்தில் அவர் தயாரிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன், நானே வருவேன் போன்ற படங்கள் வெளியாகி அவருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. தற்போது ஆளவந்தான் திரைப்படத்தை ரீ மாஸ்டர் செய்து ரீ ரிலீஸ் செய்ய மும்முரமாக உள்ளார். மற்றொரு பக்கம் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் முன் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளார். இதில் கதாநாயகனாக நடிக்க கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளிவந்து உள்ளது.