ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் |
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் கிங் ஆப் கோத என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாள திரையுலகின் பிரபல சீனியர் இயக்குனரான ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலையாள இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் கிங் ஆப் கோத படப்பிடிப்பிற்கு விசிட் அடித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அதே சமயம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு முறை இதேபோல இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு வருகை தந்தார் டொவினோ தாமஸ். தற்போது மீண்டும் அவர் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் அவரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரோ என்கிற யூகங்கள் சோசியல் மீடியாவில் கிளம்பியுள்ளன. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குறூப் என்கிற படத்திலும் சில நிமிடங்களே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.