ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இளையதளபதி விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இயக்குனர் பெயரும் விஜய்தான். இதையடுத்து இப்போது இன்னொரு விஜய்யும் இந்த படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் மகனான விஜய் ஜேசுதாஸ்தான். இப்படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் விஜய் யோசித்து வந்தபோது, பாடகர் விஜய் வில்லன் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருப்பார் என்று அவரது உதவி இயக்குனர்கள் கருத்து சொன்னார்களாம். அதன்பிறகுதான் பேசிப்பார்ப்போம் என்று அவரிடம் கேட்டிருக்கிறார் விஜய்.
விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதும், என்ன கேரக்டர் என்றுகூட கேட்காமல் நடிப்பதற்கு சம்மதம் சொல்லி விட்டாராம் விஜய் ஜேசுதாஸ். அதையடுத்து நேரில் பேசியபோதுதான் மொத்த கதையையும் சொல்லிவிட்டு, இந்த படத்தில் வருகிற வில்லன் வேடத்தில்தான் நீங்கள் நடிக்கப்போகிறீர்கள் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் டைரக்டர் விஜய். அதையடுத்து, எத்தனை நாள் கால்சீட் கேட்டாலும் தரத்தயாராக இருக்கிறேன் என்று அட்வான்ஸ் வாங்கிய விஜய் ஜேசுதாஸ், பைட் சீன்களில் நடிப்பதற்காக தனது பாடி லாங்குவேஜையும் மாற்றியிருக்கிறாராம். நடிகர் விஜய்யின் ஆஸ்தான ஸ்டன்ட் பயிற்சியாளர்களே அவரது உடல்கட்டையும் பயற்சி கொடுத்து மாற்றியிருக்கிறார்களாம்.