ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி | செத்து, பிழைத்தேன்: செல்வராகவன் உருக்கம் | 3 மணி நேரத்திற்கு மேல் ஓடப் போகும் 'ஜனநாயகன்' ? | ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிலை திறப்பு | கேரள திரைப்பட விழாவில் 19 படங்கள் திடீர் நீக்கம்: ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் | அஜித் படத்தில் இளையராஜா பாடல் நிரந்தர நீக்கம் : வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக் : 14 வயதில் மிருதங்க சக்ரவர்த்தியான ஜெயச்சந்திரன் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி ஏதாவது பதிவிட்டு அவரைப் பற்றிய அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பார். இரண்டு வாரங்களுக்கு முன்பு 'வாத்தி' பட இயக்குனரான வெங்கி அட்லூரி திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கலர் கலரான ஆடை ஒன்றை அணிந்து வந்தார். விசேஷங்களுக்கு வீட்டிற்கு வெளியில் போடும் ஷாமியானா கலரில் அந்த ஆடை இருந்ததால் ரசிகர்கள் அது பற்றி கிண்டலடித்து கமெண்ட் போட்டிருந்தார்கள்.
“என்ன மேடம், தெலுங்குப் பட ஷுட்டிங்கிலிருந்து அப்படியே திருமணத்திற்குப் போய்விட்டீர்களா,” என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தார்கள். பலத்த கிண்டலுக்கு ஆளான அந்த ஆடையுடன் ஒரு போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தன்னைக் கிண்டல் செய்து பதிவிட்டவர்களுக்கு பதிலடியாகத்தான் அந்த போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார் போலிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்துள்ள 'தசரா' படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'போலா சங்கர்' படத்தில் நடித்து வருகிறார். தமிழில் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து 'சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.




