அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் அவரது 'த டெர்மினேட்டர், ஏலியன்ஸ், ட்ரூ லைஸ், டைட்டானிக், அவதார்' ஆகிய படங்களின் மூலம் உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஒருவர்.
பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் சமீபத்தில் “உலக அளவில் 2022ம் வருடம் அதிகம் சம்பாதித்த கலைஞர்கள்” பற்றிய டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பிரபல இசைக்குழுவான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 'ஜெனிசிஸ்' 230 மில்லியன் யுஎஸ் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1905 கோடி வருமானத்தைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஹாலிவுட் நடிகரான பிராட் பிட் 100 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 828 கோடி ரூபாய் பெற்று 6ம் இடத்தில் உள்ளார்.
'அவதார்' இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 95 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 787 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்று 7ம் இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் உலக அளவில் உள்ள திரைப்பட இயக்குனர்களில் அதிக வருமானத்தைப் பெறும் இயக்குனர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். அவரது இயக்கத்தில் கடந்த வருடம் 'அவதார் 2' படம் வெளிவந்து 2.2 பில்லியன், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18,227 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. அடுத்து 'அவதார் 3' படம் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.