நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கோயிலுக்கு எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகம் வந்து செல்வார்கள். இப்போது கும்பாபிஷேகத்திற்கு பின் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த கோயிலுக்கு சென்று வர துவங்கி உள்ளனர். சில தினங்களுக்கு முன் மதுரை வந்த நடிகர் பிரபு அப்படியே பழநி சென்று முருகனை தரிசனம் செய்தார்.
சமந்தா வழிபாடு
நடிகை சமந்தா நேற்று பழநிக்கு சென்று வழிபாடு செய்தார். யானை பாதை வழியாக நடந்து சென்று கோயிலின் ஒவ்வொரு படிகளிலும் சூடம் ஏற்றி பின்னர் முருகனை தரிசித்தார். சமீபத்தில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார் சமந்தா. கடவுளின் அருளோடும், மருத்துவர்களின் ஆலோசனைகளோடு மீண்டு வந்ததாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகவும் பழநிக்கு வந்தாராம். சமந்தா உடன் 96 பட புகழ் இயக்குனர் சி.பிரேம்குமார் உடன் வந்திருந்தார்.
கவுதம் - மஞ்சிமா வழிபாடு
சமந்தாவை தொடர்ந்து இன்று(பிப்., 14) நடிகர்களும், தம்பதியருமான கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடி பழநிக்கு சென்று முருகப்பெருமானின் அருளை பெற்றனர். வின்ச் மூலம் மலையேறி சென்ற அவர்கள் பின்னர் முருகனை வழிபாடு செய்தனர்.




