ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
வாரிசு நடிகர்கள் என்றாலும் நடிகர் துல்கர் சல்மானும், நாக சைதன்யாவும் தங்களது திறமையால் தங்களுக்கென அவரவர் சார்ந்த திரையுலகில் நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அதிலும் துல்கர் சல்மான் தற்போது மலையாளம் தாண்டி பான் இந்தியா நடிகர் என சொல்லும் வகையில் அனைத்து மொழி படங்களிலும் சீரான இடைவெளியில் நடித்து வருகிறார். அதேபோல நாகசைதன்யாவும் வெங்கட்பிரபுவின் கஸ்டடி படத்தில் நடிப்பதன் மூலமாக நேரடியாக தமிழுக்கு வர இருக்கிறார். பொதுவாகவே துல்கர் சல்மான் சென்னைக்கு வந்தால் அடிக்கடி விக்ரம் பிரபுவை சந்திப்பதால் அவர்கள் மட்டுமே நண்பர்கள் என்பது போன்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் துல்கர் சல்மானும் நாக சைதன்யாவும் சென்னையில் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தபோது நண்பர்கள் ஆனவர்கள் தான். அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் தங்களுடன் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் ஒன்றாக விருந்து ஒன்றில் சந்தித்துக்கொண்டு தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழந்துள்ளனர். இவர்களது கல்லூரி நண்பர்களில் ஒருவர் இந்த புகைப்படத்தை தனது சோசியல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு, “நீண்ட நாளைக்கு பிறகு பசங்க எல்லாம் ஒன்று கூடி இருக்கிறோம்” என்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.