தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளியான படம் ‛த்ரிஷ்யம்'. சூப்பர் ஹிட்டான இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் ரீ-மேக் ஆனது. சிங்களம், சீனா உள்ளிட்ட சில வெளிநாட்டு மொழிகளிலும் இந்தப்படம் ரீ-மேக் செய்யப்பட்டது. தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கு, ஹிந்தியிலும் ரீ-மேக் ஆனது.
இந்நிலையில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆக உள்ளது. இந்தப்படத்தின் இந்திய மொழிகள் அல்லாத பிறமொழிக்கான ரீ-மேக்கை பனோரமா ஸ்டூடியோஸ் பெற்றுள்ளது. முதற்கட்டமாக ஆங்கிலம், கொரிய மொழிகளில் இந்த படத்தை ரீ-மேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது நடிகர்கள் தேர்வு நடக்கிறதாம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.