சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
தனது 30 வருட திரையுலக வாழ்க்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை மாறிமாறி இயக்கி வரும் புதிய அனுபவத்தை சந்தித்து வருகிறார் இயக்குனர் ஷங்கர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே கமலின் இந்தியன் 2 படத்தை துவங்கி அது கொரோனா, விபத்து உள்ளிட்ட காரணங்களால் தாமதமானதால் தெலுங்கில் நடிகர் ராம்சரணை வைத்து புதிய படத்தை ஆரம்பித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே இங்கே கமலின் விக்ரம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இதனால் ஒரு பக்கம் இந்தியன் 2 படப்பிடிப்பையும் இன்னொரு பக்கம் ராம்சரண் படப்பிடிப்பையும் மாறிமாறி நடத்தி வருகிறார் ஷங்கர். அந்த வகையில் கமலின் இந்தியன் 2 திரைப்படத்தை சில நாட்களுக்கு முன்பு திருப்பதி அருகே நடத்தி வந்த ஷங்கர், தற்போது அதை முடித்துவிட்டு மீண்டும் ராம்சரண் படப்பிடிப்பை ஐதராபாத்தில் துவங்கியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற வரலாற்று சின்னமான சார்மினார் அமைந்துள்ள பகுதியில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வழக்கமாக தன்னுடைய படங்கள் குறித்து எந்த அப்டேட் மற்றும் புகைப்படங்களை வெளியிட விரும்பாத ஷங்கர் சார்மினார் முன்பாக நின்று தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலையும் தெரியப்படுத்தி உள்ளார்.