'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம்தான் படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றார்கள். ஆனால், சென்ற சில நாட்களிலேயே த்ரிஷா மீண்டும் சென்னை திரும்பினார். அதற்குள் அது பற்றி சிலர் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பினார்கள். படத்திலிருந்து த்ரிஷா விலகிவிட்டார் என்பதுதான் அந்த வதந்தி. இந்தப் படம் விஜய்க்கு மட்டும் 67வது படமல்ல, த்ரிஷாவுக்கும் 67வது படம் என்பது சிறப்பு. அப்படியிருக்கும் போது அவர் எப்படி இந்தப் படத்திலிருந்து விலகுவார் என்பது கூட தெரியாமல் பரபரப்புக்காக சிலர் அப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புகிறார்கள்.
இன்று மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளார் த்ரிஷா. விமானத்திலிருந்து காஷ்மீரின் அழகை அவர் எடுத்த வீடியோவையும் அங்கு அவர் சாப்பிட்ட உணவு, அறையிலிருந்து எடுத்த பனி படர்ந்த மலை உள்ளிட்ட சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.