தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம் 'விடுதலை'. இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவுடன் முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார் வெற்றிமாறன்.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'ஒன்னோடு நடந்தா' என்ற பாடல் இன்று காலை வெளியானது. சுகா எழுதி தனுஷ், அனன்யா பட் பாடிய இந்தப் பாடலை இசை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

படத்தின் நாயகனாக சூரி அது பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். “என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இசைஞானி இளையராஜா ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ‛‛சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார்'' என்று குறிப்பிட்டுள்ளார் சூரி.