ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஜனவரி 11ம் தேதி வெளியான படம் 'வாரிசு'. இப்படம் வெளியான ஐந்தே நாட்களில் 150 கோடி வசூலித்தது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். 7 நாட்களில் 210 கோடியும், 11 நாட்களில் 250 கோடியும் வசூலித்ததாகவும் அடுத்தடுத்து வசூல் கணக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள்.
தற்போது படம் வெளியாகி 28 நாட்கள் ஆகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் படம் 300 கோடி வசூலித்துள்ளதாக டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். #VarishHits300Crs , #VarisuBlockbuster என இரண்டு ஹேஷ்டேக்குகளுடன் அந்த டிரெண்டிங் போய்க் கொண்டிருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் ரசிகர்களே இப்படி வசூலை அறிவித்து கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஆறேழு புதிய படங்களுடன் ஒப்பிடும் போது கடந்த மூன்று நாட்களாக 'வாரிசு' வசூலே சிறப்பாக இருந்ததாக தியேட்டர் வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள். அதிகபட்சம் இந்த வாரம் வரை 'வாரிசு' படம் தியேட்டர்களில் தாக்குப்பிடிக்கலாம்.