ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சினிமா பக்கம் வந்துள்ளார். தோனி என்டர்டெய்ன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள அவர், முதல்படமாக தமிழ் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு 'எல்.ஜி.எம்' (லெட்ஸ் கெட் மேரீட் ) என பெயரிட்டுள்ளனர். இதில் நாயகனாக ஹரிஷ் கல்யாணும், நாயகியாக லவ்டுடே புகழ் இவானாவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நதியாவும், யோகிபாபுவும் இணைந்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
தோனியின் மனைவி சாக்ஷி சிங் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று(ஜன., 27) நடந்தது. இதில் சாக்ஷி, ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
சாக்ஷி சிங் தோனி பேசுகையில்,“ நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்.” என்றார்.