'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
1997ம் ஆண்டு தமிழிலில் முதல்முறையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராய் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் பிரபலமடைந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய் பெயரில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த ஓராண்டாக நில வரி செலுத்தாததை தொடர்ந்து, நாசிக் மாவட்ட வருவாய்த்துறை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் நில வரி செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அப்பகுதியில் நில வரி செலுத்தாத 200க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.