பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் |
மகேஷ்பாபு நடிக்கும் அவரது 28 வது படத்தை இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய நிலையில் மகேஷ்பாபு குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோகமான நிகழ்வு உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி ஜனவரி 18ல் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் ஆகஸ்ட் 11ல் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள புட்டபொம்மா என்கிற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது இந்த அறிவிப்பை வெளியிட்ட இவர், இந்த படத்தின் பூஜா ஹெக்டே உடன் நடிகை ஸ்ரீ லீலாவும் இன்னொரு கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற தகவலையும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல ஸ்ரீ லீலா இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகி அல்ல என்றும் பூஜாவும் ஸ்ரீ லீலாவும் சம முக்கியத்துவம் உள்ள இரண்டு கதாநாயகிகளாக நடிக்கின்றனர் என்பதையும் அழுத்தமாக கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இந்த படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பதிலாக தான் ஸ்ரீ லீலா இந்த படத்தில் நுழைந்துள்ளார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற பெல்லி சந்தடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீ லீலா கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான தமாக்கா படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.